தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மா. கம்யூ., போராட்டத்தில் தள்ளுமுள்ளு விருத்தாசலத்தில் பரபரப்பு

 மா. கம்யூ., போராட்டத்தில் தள்ளுமுள்ளு விருத்தாசலத்தில் பரபரப்பு

 மா. கம்யூ., போராட்டத்தில் தள்ளுமுள்ளு விருத்தாசலத்தில் பரபரப்பு


ADDED : பிப் 21, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: இலவச மனைபட்டா வேண்டி, மா. கம்யூ., கட்சியினர் நடத்திய போராட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கம்மாபுரம் ஒன்றியத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு, இலவச மனைபட்டா வழங்க கோரி, விருத்தாசலம் பாலக்கரையில், மா. கம்யூ., கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு, ஒன்றிய செயலர் கலைச்செல் வன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட செயலர் அசோகன், விருத்தாசலம் ஒன்றிய செயலர் குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயற்குழு கண்ணன் கலந்துகொண்டு பேசினார். இதில், நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதன்பின், மனு கொடுக்க ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர்.

அப்போது, போலீசார் பேரணிக்கு அனுமதியில்லை என அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதன்பின் பேரணியாக சென்று, ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அந்தோணிராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us