ADDED : ஆக 22, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் ஜவான்பவன் அருகில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ராஜேஷ்கண்ணன், வாஞ்சிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆளவந்தார், பக்கிரான், கிருஷ்ணன், ஸ்டீபன் ராஜ், தண்டபாணி, பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இடதுசாரி மாணவர் இயக்கங்களுக்கு எதிராக செயல்படும் தலைமை செயலரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
