/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகவேந்திரர் கோவிலில் மகா மந்த்ர ஜபம்
/
ராகவேந்திரர் கோவிலில் மகா மந்த்ர ஜபம்
ADDED : செப் 29, 2025 12:55 AM

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் மகா மந்த்ர ஜபம் நடந்தது.
அகில உலக ராகவேந்திரர் பக்தி இயக்கம் சார்பில் உலககெங்கும் உள்ள ராகவேந்திரர் பக்தர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர்.
இவர்கள் கடந்த ஆண்டு மந்திராலயத்தில் மகா மந்தர ஜபம் நடத்தினர். இவர்கள், இந்த ஆண்டு புவனகிரி ராகவேந்திரர் கோவிலுக்கு வருகை தந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ராகவேந்திரர் புனிதத்தொண்டு அறக்கட்டளை சார்பில் குருராயரின் படத்திற்கு லட்சார்ச்சனை, பூஜையுடன் மஹா மந்த்ர ஜபம் நடத்தினர்.
முன்ன தாக, ராகவேந்தி ரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜை களை அர்ச்சகர் ரமேஷ் ஆச்சாரி குழுவினர் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலாளர் டாக்டர் உதயசூரியன்,பொருளாளர் கதிர்வேல் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.