தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மாநில அளவில் சாதனை

 மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மாநில அளவில் சாதனை

 மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மாநில அளவில் சாதனை


ADDED : ஜூன் 04, 2026 09:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 09:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் தேர்வில் சாதனை படைத்தனர்.

கடலுார் அடுத்த வைரங்குப்பம் ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் 10 பேர் கடந்த மாதம் நடந்த அரசு வாரிய தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

பல்வேறு பாடங்களில் 98 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.

மேலும், 54 பாடங்களில் அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

மின்னியல் துறை மூன்றாமாண்டு மாணவர்கள் தனவேந்தன், ஜெனீசன், ஜனகன், ராமநாதன், இயந்திரவியல் துறை மூன்றாமாண்டு மாணவர்கள் நிவாஸ், விஜயசாரதி ஆகியோர் 300க்கு 300 மதிப்பெண் பெற்றனர்.

இரண்டாமாண்டு மாணவர்கள் சிவசந்திரன், அபுபக்கர் சித்திக், சபரிநாதன், நரேந்திரகுமார் ஆகியோர் 700க்கு 700 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

சாதனை மாணவர்களையும் , சிறப்பாக பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் ஸ்ரீமகாலட்சுமி கல்வி குழுமங்களின் தலைவர் ரவி, தாளாளர் தேவகி ரவி, கல்லுாரி துணைத்தலைவர் ராக்கவ் தினேஷ், இயக்குனர்கள் மதுமதி, காவியா பிரியா, மேலாளர் விஜயகுமார், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஆஷ்லி, முதல்வர் இளவ ரசன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us