sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வேப்பூரில் மக்காச்சோளம் அறுவடை பாதிப்பு

/

 வேப்பூரில் மக்காச்சோளம் அறுவடை பாதிப்பு

 வேப்பூரில் மக்காச்சோளம் அறுவடை பாதிப்பு

 வேப்பூரில் மக்காச்சோளம் அறுவடை பாதிப்பு


ADDED : ஜன 26, 2026 03:38 AM

Google News

ADDED : ஜன 26, 2026 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: வேப்பூர் பகுதியில் தொடர் மழையால் மக்காச்சோளம் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

வேப்பூர் பகுதிகளில் குறைந்த பராமரிப்பில் அதிக விளைச்சல் தரும் மக்காச்சோளத்தை, மானாவாரியாக அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு 40 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வேப்பூர் அடுத்த பெரியநெசலூர், விளம்பாவூர், அடரி, மங்களூர் உட்பட பல கிராமங்களில் மக்காச்சோள அறுவடை நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வேப்பூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வயல்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இயந்திரங்கள் மூலம் மக்காசோளத்தை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெரியநெசலுார் கிராமத்தை சேர்ந்த விவசாயி கூறுகையில், கடந்த 5 மாதங்களுக்கு முன் மக்காச்சோளம் பயிரை சாகுபடி செய்தோம். போதிய பருவமழை இல்லாமல் சாகுபடி செய்த பயிர்களில் சில கருகின. அதில் தப்பிய பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர் சாரல் மழையால் மக்காச்சோளத்தை அறுவடை செய்ய முடியவில்லை.

இதனால், செடிகளிலேயே கதிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us