தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சபா ராஜேந்திரனை வெற்றி பெற செய்யுங்கள்

 சபா ராஜேந்திரனை வெற்றி பெற செய்யுங்கள்

 சபா ராஜேந்திரனை வெற்றி பெற செய்யுங்கள்


ADDED : ஏப் 22, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்வேலி: நெய்வேலியில், என்.எல்.சி., தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., எல்.எல்.எப்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர்.

என்.எல்.சி.,யின் அனல்மின் நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், என்.எல்.சி., தலைமை அலுவலகம் உள்ளிட்ட அலுவலக பகுதி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட என்.எல்.சி.,யின் அனைத்து தொழிலக மற்றும் அலுவலக பகுதிகளில் தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்தனர்.

நெய்வேலி தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம், புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன் மற்றும் தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா ஆகிய, 4 வேட்பாளர்களுக்கு தீவிரமாக ஓட்டு சேகரித்தனர்.

என்.எல்.சி.,யில் பணியாற்றி வருபவர்களில் பெரும்லோனோர் நெய்வேலி தொகுதியிலும், அடுத்ததாக குறிஞ்சிப்பாடி, புவனகிரி மற்றும் விருத்தாசலம் தொகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். அந்த வகையில் குறிப்பிட்ட 4 தொகுதி வேட்பாளர்களுக்கும் என்.எல்.சி., தொழிற்சங்க நிர்வாகிகள் துண்டறிக்கைகள் ஓட்டு சேகரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us