/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடனை திருப்பி கேட்டதால் நண்பனை தாக்கியவர் கைது
/
கடனை திருப்பி கேட்டதால் நண்பனை தாக்கியவர் கைது
ADDED : டிச 22, 2024 09:25 AM
விருத்தாசலம் விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையை சேர்ந்தவர் இலியாஸ், 51. ராஜேந்திரபட்டிணம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 45. இருவரும் நண்பர்கள். இந்நிலையில், ரமேஷ் வீடுகட்டுவதற்காக, இலியாசிடம் மூன்று தவணைகளாக ரூ.17 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி இலியாஸ் தான் கொடுத்த பணத்தை ரமேஷிடம் திருப்பி கேட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்தரமேஷ், இலியாசை அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ரமேைஷ நேற்று முன்தினம் கைது செய்தனர்.