/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபர் மீது தாக்குதல் ஒருவர் கைது
/
வாலிபர் மீது தாக்குதல் ஒருவர் கைது
ADDED : ஜன 17, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: வாலிபரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த துறையூரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 34; இவர் அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரிடம் சபரிமலை சென்று வந்தது தொடர்பாக கணக்கு பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த விஜயகாந்த், 43, என்பவர் இங்கு ஏன் சத்தம் போடுகிறீர்கள் எனக்கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த விஜயகாந்த், வேல்முருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விஜயகாந்தை கைது செய்தனர்.