ADDED : ஏப் 18, 2025 04:56 AM
விருத்தாசலம்: பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்ற வாலிபரை தாக்கிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த நாகம்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ரமேஷ், 23; இவர், தனது நண்பர் மணிவேல் என்பவருடன் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் சென்றார்.
கருவேப்பிலங்குறிச்சி வந்த போது, அங்கிருந்த தனியார் பெட்ரோல் பங்கில், பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அப்போது, பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்பருக்கும் ரமேஷிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஜீவா, ஆதரவாளர்கள் சூர்யமூர்த்தி, குபேந்திரன், ஷாருக்கான், சதீஷ்,25; ஆகியோர் ரமே ைஷ தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார், ஜீவா, சூர்யமூர்த்தி, குபேந்திரன் உள்ளிட்ட 5 பேர் மீதுவழக்குப் பதிந்து,சதீைஷ கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.

