ADDED : மே 29, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
திட்டக்குடி: சட்டசபை தேர்தல் முன்விரோதத்தில் வி.சி.,கட்சி நிர்வாகியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த தி.இளமங்கலத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன், 46; வி.சி., கட்சி மாநில நிர்வாகி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 32; என்பவருக்கும் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது பணம் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த மணிகண்டன், அவரது நண்பர் வெங்கடேசன் இருவரும் மகேந்திரனை திட்டித் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், மணிகண்டன், வெங்கடேசன் இருவர் மீது, திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.
