UPDATED : நவ 12, 2026 07:27 PM
ADDED : நவ 12, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: இளம்பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பம், தெற்குதெருவை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மனைவி செல்வகுமாரி,36;
இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது ஒதியடிக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன், 21; செல்வகுமாரியை வழிமறித்து,ஆடுகளை ஏன் இந்த வழியாக ஓட்டி வருகிறாய் என கேட்டு ஆபாசமாக திட்டி தாக்கினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
