/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணி தலையை துண்டித்து கொன்ற கொழுந்தன் கைது
/
அண்ணி தலையை துண்டித்து கொன்ற கொழுந்தன் கைது
ADDED : டிச 01, 2025 01:04 AM

சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே காட்டுக்கூடலுார், குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழரசி, 35. இவர் கணவனை பிரிந்து இரு மகன்களுடன் வசித்தார்.
இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் தம்பிகளான பாலகிருஷ்ணன், முருகானந்தம் இருவரும், தனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்வதாக, சிதம்பரம் தாலுகா போலீசில் தமிழரசி புகார் அளித்தார். போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர். பாலகிருஷ்ணன் தலைமறைவானார்.
இந்நிலையில், முன் ஜாமின் பெற்ற பால கிருஷ்ணன், நேற்று மாலை தமிழரசி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, போலீசில் புகார் கொடுத்தது தொடர்பாக கேட்டு தாக்கியுள்ளார்.
ஆத்திரம் தீராத பாலகிருஷ்ணன், கத்தியால் தமிழரசியின் கழுத்தை அறுத்து தலையை தனியாக துண்டித்து கொலை செய்தார். சிதம்பரம் தாலுகா போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

