தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : ஆக 12, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு,ஆக.13– முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த பட்டிக்குப்பத்தை சேர்ந்த அமுர்தலிங்கம் மகன் தேவநாதன்,20;ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் தமிழரசன் மகன் சச்சின்,21;இவருக்கும், பட்டிக்குப்பத்தை சேர்ந்த ராசுவிற்கும், கடந்த 5ம் தேதி வாய் தகராறு ஏற்பட்டது. அதை தேவநாதன், அவரது நண்பர் லோகநாதன் ஆகியோர் விளக்கி விட்டனர்.

அதில், ஆத்திரமடைந்த சச்சின் நேற்று காலை நடுவீரப்பட்டில் உள்ள வங்கிக்கு வந்த தேவநாதன், லோகநாதன் ஆகியோரை தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஆபாசமாக திட்டி தாக்கி, கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்தனர். 

அதில் படுகாயமடைந்த தேவநாதன், லோகநாதன் இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சச்சின், சசிக்குமார், அருண்குமார் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்த நடுவீரப்பட்டு போலீசார், சச்சினை கைது செய்தனர். மற்ற இருவரை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us