/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்றவர் கைது
/
டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்றவர் கைது
டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்றவர் கைது
டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்றவர் கைது
ADDED : நவ 24, 2024 06:52 AM
காட்டுமன்னார்கோவில் : டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது, வீரசோழபுரத்தில் மகாலிங்கம் மகன் மதன்குமார்,34; என்பவர், டாஸ்மாக் மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், மதன்குமார் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் மதன்குமாரை கைது செய்ய முயன்றபோது, கத்தியை தன் கழுத்தில் வைத்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் லாவகமாக மதன்குமாரை பிடித்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.