ADDED : மார் 28, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
வடலுார்: அருவாமனையால் வாலிபரை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்
வடலுார் அடுத்த ராசாக்குப்பம், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி 23; நேற்று முன்தினம் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், சாலையில் கூச்சலிட்டுள்ளனர். இதனை அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் தட்டி கேட்டார்.
ஆத்திரமடைந்த வீரமணி சந்தோஷ்குமாரை அருவாமனையால் தலையில் வெட்டினார். இதனை தடுக்க சென்றவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் காயமடைந்த சந்தோஷ்குமார், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் வீரமணியை கைது செய்தனர்.
