/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தத்தில் ஆசாமி கைது
/
மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தத்தில் ஆசாமி கைது
மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தத்தில் ஆசாமி கைது
மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தத்தில் ஆசாமி கைது
ADDED : செப் 19, 2025 03:33 AM

கடலுார்: நுாறு நாள் வேலைக்கு சென்ற மூதாட்டியிடம் செயினை பறித்து சென்றவரை, போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அம்மணி, 60; இவர், கடந்த 8ம் தேதி கொரக்கவாடி கிராமத்தில் 100 நாள் வேலைக்கு நடந்து சென்றார். அப்போது, அவரை பைக்கில் வந்த நபர், அழைத்து சென்று, ஏரிக்கரை அருகில் இறக்கி விட்டுவிட்டு சென்றார்.
சிறிது நேரத்தில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 சவரன் செயினை காணவில்லை. இதுகுறித்து அவர் ராமநத்தம் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., பார்த்திபன் மேற்பார்வையில், ராமநத்தம் இன்ஸ்பெக்டர் பிருந்தா, சப் இன்ஸ்பெக்டர்கள் ஜம்புலிங்கம், ரவிச்சந்திரன மற்றும் போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.
அதில் மூதாட்டியிடம் தங்க செயினை பறித்து சென்றது பெரம்பலுார் மாவட்டம், கீழ புலியூரைச் சேர்ந்த பிரபாகரன், 39; எனத் தெரிந்தது. இவரை போலீசார் நேற்று கைது செய்து, 3 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.