ADDED : பிப் 05, 2025 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி; நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 1ல் உள்ள சி. ஆர் காலனியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் சத்யராஜ். 31; இவர் நெய்வேலி மெயின் பஜாரில் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார்.
நெய்வேலி அடுத்த செடுத்தான் குப்பம் சிலோன் காலனியில் வசிப்பவர் சிவநாதன் மகன் முத்துக்குமார். 32. நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த முத்துக்குமார், சத்யராஜை, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்த சத்யராஜ் நெய்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சத்யராஜ் கொடுத்த புகாரில் டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனர்.