தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோவிலில் பூஜை பொருட்கள் திருடியவர் கைது

 கோவிலில் பூஜை பொருட்கள் திருடியவர் கைது

 கோவிலில் பூஜை பொருட்கள் திருடியவர் கைது


ADDED : ஜூன் 29, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 04:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: கோவில் பூட்டை உடைத்து, பூஜை பொருட்கள் திருடியவரை, போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தில் உள்ள வீரன் கோவிலில் நேற்று கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதைப்பார்த்த, அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, கோவிலுக்குள் சென்று பார்த்தனர். கோவிலில் இருந்த, பூஜை மணி, பித்தளை குத்துவிளக்கு , பித்தளை குடம் உள்ளிட்ட பூஜை பொருட் கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து, கோவில் பூசாரி சுப்பராயலு கொடுத்த புகாரின்பேரில், மருதுார் போலீசார் வழக்குப்பதிந்து, புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுார் கிராமத்தை சேர்ந்த சக்திவேலை, 49; கைது செய்தனர். அவரிடமிருந்து, பூஜை பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us