ADDED : ஏப் 12, 2025 10:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வி, 42; இவர் கடந்த 11ம் தேதி சொந்த வேலையாக சிதம்பரத்திற்கு பஸ் ஏற பு.முட்லுாருக்கு நடந்து சென்றார்.
மேட்டுக்குப்பம் அருகே செல்லும் போது, மஞ்சக்குழி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார், 45; என்பவர் செந்தமிழ்ச்செல்வியை, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்குப் பதிந்து, சிவக்குமாரை, கைது செய்தார்.

