/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலத்தில் மது குடித்தவர் தண்ணீரில் விழுந்து பலி
/
பாலத்தில் மது குடித்தவர் தண்ணீரில் விழுந்து பலி
ADDED : பிப் 02, 2025 05:01 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியில் வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி, மாதாகோவில் தெருவைச் சேர்ந்த வனத்தையன் மகன் பரிசுத்தராஜா,50; விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் அகரபுத்துார் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து மதுக்குடித்தார். இரவாகியும் வீடு திரும்பவில்லை.
நேற்று காலை 7.00 மணிக்கு வயலுக்கு சென்றவர்கள் வாய்க்காலில் பரிசுத்தராஜா இறந்து கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சோழத்தரம் போலீசார் உடலை கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.