ADDED : செப் 15, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
கடலுார்: திருநங்கை வீட்டில் பொருட்களை தீ வைத்து எரித்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்த 23 வயது திருநங்கைக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னையைச் சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடலுார், புதுப்பாளையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்தனர்.
இந்நிலையில், வாலிபர் மது குடித்துவிட்டு வந்ததை திருநங்கை கண்டித்தார். அதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து திருநங்கை வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். அப்போது, திருநங்கை வீட்டில் இருந்த துணி உள்ளிட்ட பொருட்களை வாலிபர் தீ வைத்து எரித்து சேதப்படுத்தினார்.
புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, வாலிபரை தேடிவருகின்றனர்.
