தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது

ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது

ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது


UPDATED : அக் 14, 2026 09:08 PM

ADDED : அக் 14, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 09:08 PM ADDED : அக் 14, 2026 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டியில் ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திய மற்றொரு டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த கே.குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சிவராமன் மகன் நந்தகோபாலகிருஷ்ணன்,44; ஆட்டோ டிரைவர்; இவரது ஆட்டோவை, திருவதிகையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு,43; சவாரிக்கு எடுத்து சென்றார். அதற்காக, நந்தகோபாலகிருஷ்ணன், பிரபுவிடம் ரூ.2,000 பணம் கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்னை உள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு, பண்ருட்டி பஸ் நிலையத்தில் நின்றிருந்த பிரபுவிடம், நந்தகோபாலகிருஷ்ணன் பணத்தை கேட்டார். அதில் ஏற்பட்ட தகராறில், பிரபு தான் வைத்திருந்த கத்தியால் நந்தகோபாலகிருஷ்ணன் வயிற்றில் குத்தினார்.

அதில், நந்தகோபாலகிருஷ்ணன் படுகாயமடைந்தார். பிரபுவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆபத்தான நிலையில் இருந்த நந்தகோபாலகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நந்தகோபாலகிருஷ்ணன் மனைவி சந்தியா,36; கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, பிரபுவை கைது செய்தனர். மேலும், பிரபு கொடுத்த புகாரின் பேரில் நந்தகோபால் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us