ADDED : பிப் 23, 2026 03:16 AM
அ நிறம் | அளவு
கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில் நிறுவன மேலாண்மைக்குழு துவக்க விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சண்முக சுந்தரம் வரவேற்றார்.
நிறுவன மேலாண்மை குழுவை சிதம்பரம் சாரதாராம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கேதார்நாதன், துவக்கி வைத்து பேசினார்.
சென்னை மேஜிக் பஸ் நிறுவனத்துடன், சிதம் பரம் அரசு கலைக்கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், பேராசிரியர் சுடர்விழி, ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் தீபக்குமார், லையன் இந்தியா ஸ்டீல் நிறுவன இயக்குநர் விஜய பாலன் மற்றும் துறைத் தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பேராசிரியர் சீனுவாசன், நன்றி கூறினார்.
