/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிவராகநத்தம் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
/
ஆதிவராகநத்தம் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
UPDATED : மார் 31, 2025 01:35 PM
ADDED : மார் 31, 2025 05:50 AM

புவனகிரி: ஆதிவராகநத்தம் வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது.
புவனகிரி, ஆதிவராகநத்தம் கிராமம் வெற்றி வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. இதையடுத்து தினசரி மண்டலாபிஷேகம் நடந்தது.
மண்டலாபிஷேகம் நிறைவு விழாவையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், வேதிகார் அர்ச்சனையுடன் விசேஷ பூஜை நடந்தது. 11:00 மணிக்கு கோ பூஜை, மூலவர் அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.
மாலை வெற்றி வேலாயுத சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.