ADDED : அக் 28, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் நேற்று மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் மற்றும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நேற்று மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, மகா யாகம் நடந்தது.
10:30 மணிக்கு யாகத்தின் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சுவாமிகளுக்கு கலச அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து உற்சவர் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், இரவு சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம், திருப்பணிக்குழு தலைவர் ராஜாமணி ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.