/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்கையரின் மனம் கவரும் கடலுார் அழகப்பா நகை மாளிகை
/
மங்கையரின் மனம் கவரும் கடலுார் அழகப்பா நகை மாளிகை
ADDED : அக் 11, 2024 06:26 AM

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோட்டில் கடந்த 1966ம் ஆண்டு முதல்லாபம் மட்டுமே குறிக்கோள் இன்றி வாடிக்கையாளர்களின் திருப்திக்காக வியாபாரம் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் தான் அழகப்பா நகை மாளிகை.
இதுகுறித்து கடை உரிமையாளர் அழகப்பா மணி கூறியதாவது:
கடந்த 56ஆண்டுகளாக மக்கள் சேவையில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த சேதாரத்தில், அனைத்து நகைகளும் புத்தம் புதிய டிசைன்களில் விற்பனை செய்கிறோம்.
நிறைந்த தரம், குறைந்த விலை,கண்களை கவரும் எண்ணிலடங்கா டிசைன்கள், அதிக வியாபாரம் என்பதே குறிக்கோள். பழைய நகைகள் வேறு கடை பொருளாக இருந்தாலும் அன்றையவிலைக்கு மாற்றித் தரப்படும். இந்நிறுவனத்தின் நிறுவனர் அழகப்பா நினைவு தினத்தையொட்டி கடந்த 2001ம் ஆண்டு முதல் இலவச கண் கிச்சை முகாம் நடத்தப்படுகிறது. அழகப்பா நகை மாளிகையின் மற்றொரு கிளையானது எண்.29, சுப்ராய செட்டித் தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலுார் என்ற முகவரியில் உள்ளது. இது நெஞ்சை அள்ளும் அழகிய நகைகளின் ஆலயமாக திகழ்கிறது. இங்கு, அனைத்து நகைகளும் 916 பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி பொருட்கள் குறைந்த சேதாரம், குறைந்த கூலியில் விற்பனை செய்யப்படுகிறது. சிறுதுளி தங்க நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
தீபாவளி மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு புதிய டிசைன்கள் நியாயமான சேதாரத்தில் எப்போதும் விற்பனை செய்யப்படுகிறது.
கடலுார் சுப்ரீம் அரிமா சங்க மாவட்டத் தலைவராக பதவி வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம்.
60 முறை ரத்த தானம் வழங்கியதற்காக கலெக்டரிடம் தன்னார்வ ரத்த கொடையாளர் விருது பெற்றுள்ளேன். எனது மனைவி கவிதா மணி, சுப்ரீம் அரிமா சங்கம் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். எனது மகன்கள் அஸ்வின், அசோக் ஆகியோரும் நகை விற்பனை மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ளனர். திருவந்திபுரம் மெயின்ரோடு, கே.என்.,பேட்டையில் நவீன வசதிகளுடன் அழகப்பா திருமண மண்டபம் குறைந்த வாடகையில் இயங்குகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.