/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்களூர் தி.மு.க.,வினர் பொங்கல் கொண்டாட்டம்
/
மங்களூர் தி.மு.க.,வினர் பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 16, 2024 06:36 AM

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அடுத்த மங்களூர் ஒன்றிய தி.மு.க.,வினர் கிராம மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடினர்.
மங்களூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் கட்சி நிர்வாகிகள், பெண்கள், கிராம மக்களுடன் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாட வேண்டுமென அமைச்சர் கணேசன் உத்தரவிட்டார்.
அதன்படி, சிறுபாக்கம் அடுத்த மலையனுார் ஊராட்சியில் தி.மு.க., சார்பில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மங்களூர் தெற்கு ஒன்றிய செயலர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி தலைவர் தேவராஜ், தி.மு.க., நிர்வாகிகள் சேகர், திருவள்ளுவன், ராமச்சந்திரன், குமணன், ராஜசேகர், சின்னதுரை, உட்பட பலர் பங்கேற்றனர். இதில், தி.மு.க., வினர் கிராம மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சி சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.