sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணிக்கவாசகர் கோவில் இடம் மீட்பு 300 ஆண்டு அரச மரத்தில் மேடை அமைப்பு

/

மாணிக்கவாசகர் கோவில் இடம் மீட்பு 300 ஆண்டு அரச மரத்தில் மேடை அமைப்பு

மாணிக்கவாசகர் கோவில் இடம் மீட்பு 300 ஆண்டு அரச மரத்தில் மேடை அமைப்பு

மாணிக்கவாசகர் கோவில் இடம் மீட்பு 300 ஆண்டு அரச மரத்தில் மேடை அமைப்பு


ADDED : ஜன 06, 2024 05:00 AM

Google News

ADDED : ஜன 06, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் குருநமச்சிவாய மடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதையடுத்து, பல ஆண்டுகளாக மறைந்திருந்த 300 ஆண்டுகால அரச மரம் மீட்கப்பட்டு, சுற்றிலும் மேடை கட்டப்பட்டுள்ளது.

சிதம்பரம். வேங்கான் தெருவில், குருநமச்சிவாய மடத்தில், விநாயகர், யோகாம்பாள், ஆத்மநாதர், குருநமச்சிவாயர், மாணிக்கவாசகர் கோவில்கள் உள்ளன. இக்கோவில் இடத்தை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

கும்பகோணத்தைச் சேர்ந்த பக்தர் வாஞ்சிநாதன் என்பவர், கடந்த 2018ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி 13 வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அக்டோபர் 31ம் தேதி, பல்வேறு தடைகளைத் தாண்டி, கோவிலை சுற்றி, சீல் வைக்கப்பட்ட, 13 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.

300 ஆண்டு அரச மரம் மீட்பு


கோவிலின் இடதுபுறத்தில் 300 ஆண்டு கால அரச மரம் ஆக்கிரமிப்பு வீடுகளால் மறைக்கப் பட்டிருந்தது.

வீடுகள் இடித்து அகற்றப்பட்டபின்பு, தற்போது மரம் வெளியே தெரிகிறது. தொடர்ந்து நீர் நிலை ஆக்கரமிப்பு சங்கத் தலைவர் செங்குட்டுவர் முயற்சியால், மரத்தை சுற்றி மேடை அமைக்கப் பட்டுள்ளது.

ஆத்மநாதர், மாணிக்கவாசகரை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், மரத்தின் மேடையில் அமர்ந்து தியானம் செய்தும், தேவாரம் பாடியும், தரிசித்து வருகின்றனர்.

மீண்டும் நோட்டீஸ்


அடுத்த கட்டமாக, கோவிலைச் சுற்றியுள்ள, மேலும் 63 வீட்டு உரிமையாளர்களுக்கு அறநிலையத்துறை சார்பில், மீண்டும் நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் கவுன்சிலர் சரவணன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முத்துசாரங்கன் தலைமையில் சப் கலெக்டர் ராஷ்மிகா ராணியிடம் நேற்று மனு அளித்தனர்.

அதில், 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வீடுகளுக்கு தரை வாடகை நிர்ணயித்து தருமாறு கோரிக்கை விடுத்துள் ளனர்.






      Dinamalar
      Follow us