/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மண்ணெண்ணெய் கேனுடன் மனு கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
/
மண்ணெண்ணெய் கேனுடன் மனு கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
ADDED : ஆக 05, 2025 01:53 AM
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவரால் பரபரப்பு நிலவியது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மனு அளிக்க வருபவர்களை போலீசார், தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.
மதியம் 1 மணிக்கு மனு அளிக்க வந்த 2 மகள்களுடன் வந்த பெண்ணிடம் இருந்த பையை, நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை செய்தனர்.
அதில், பிளாஸ்டிக் கேனில் மண்ணெண்ணெய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த காந்தி மனைவி பானுமதி என்பது தெரிந்தது.
தனக்கு சொந்தமான இடத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளிக்க வந்ததும் தெரிந்தது. உடன், அவரை போலீசார் எச்சரித்து மனு அளிக்க அனுப்பினர்.