ADDED : டிச 17, 2024 06:38 AM
அ நிறம் | அளவு
புவனகிரி; புவனகிரியில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தத் திட்டம் சார்பில், மர்கழி மாத திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
புவனகிரி நன்னைய ராமாநுஜ கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பூவராக ராமாநுஜதாசர் தலைமை தாங்கினார். வெங்கடாசலபதி வரவேற்றார். ராஜமோகன் துவக்கவுரையாற்றினார். நேற்று காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையில் பேராசிரியர் கோகுலச்சாரியர் சிறப்பு சொற்பொழிவாற்றினார். ஜனவரி 14ம் தேதி வரை தினசரி காலையில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிழ்ச்சி நடக்கிறது.
