/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கோவிலில் செவ்வாய் வழிபாடு
/
கொளஞ்சியப்பர் கோவிலில் செவ்வாய் வழிபாடு
ADDED : ஜன 29, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கொளஞ்சியப்பர் கோவிலில் தை மூன்றாம் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், தை மாத மூன்றாம் செவ்வாய்கிழமை முன்னிட்டு சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மேல், சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.
இதேபோல், சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன், எருமனுார் ரோடு ஜெகமுத்து மாரியம்மன், தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

