/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆழ்துளை கிணறு அமைக்க மருதாடு மக்கள் எதிர்ப்பு
/
ஆழ்துளை கிணறு அமைக்க மருதாடு மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 28, 2025 04:58 AM
கடலுார்: மருதாடு எல்லையில் ஆழ்துளை கிணறு அமைத்து, புதுச்சேரிக்கு குடிநீர் வழங்கும் பணியை தமிழக அரசு நிறுத்தக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கடலுார் அடுத்த மருதாடு கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;
புதுச்சேரி நகரப்பகுதிக்கு குடிநீர் வழங்க, தமிழக எல்லையான மருதாடு கிராமத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க, புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது மருதாடு மற்றும் நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, குமாரபுரம், வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை குறைப்பதோடு, குடிநீரின் உப்பு தன்மையை அதிகரிக்கும். புதுச்சேரி பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடியதால், ஏற்கனவே திட்டமிட்டப்படி அப்பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் வெட்டும் முயற்சி கைவிடப்பட்டது.
மருதாடு எல்லையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளதை, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.