ADDED : ஏப் 18, 2026 10:45 PM

பெண்ணாடம்:மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பைக் மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் போலீசார் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்தின்பேரில் வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது, பைக்கில் 62 மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரிந்தது.
விசாரணையில், அவர்கள், சோழன் நகர் சேட்டு, 45, சக்திவேல், 27, என்பதும், தெற்குரத வீதி ஜாஸ்மின் என்பவரது பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரிந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து பைக் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பைக்கை அவ்வப்போது ஜாஸ்மின் போலீசாரிடம் கேட்டு வந்தார். போலீசார் கடலுார் கலால் போலீசில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த ஜாஸ்மின் நேற்று மாலை 6;00 மணியளவில் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள 150 அடி உயரமுள்ள மொபைல் போன் டவரில் ஏறி பைக்கை தருமாறு கூறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
தகவலறிந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ஜாஸ்மினிடம் சமாதானம் பேசி, மாலை 6:30 மணியளவில் இறங்க செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
