நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் தெற்கு பெரியார்நகர், சக்தி நகரில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமையிலான மருத்துவ குழுவினர், பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமினை, சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்மோகன், அவினாஷ், சதீஷ்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

