/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இ.கே.சுரேஷ் கல்வி குழுமத்தில் மருத்துவ முகாம்
/
இ.கே.சுரேஷ் கல்வி குழுமத்தில் மருத்துவ முகாம்
ADDED : செப் 23, 2024 08:22 AM

விருத்தாசலம்,: விருத்தாசலம் அடுத்த எருமனுாரில் உள்ள டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழுமம், அலைடு அன்டு ெஹல்த் சயின்ஸ் செவிலியர் பயிற்சி மையத்தில், மருத்துவ முகாம் நடந்து.
முகாாமிற்கு, கல்வி குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். கலை மற்றும் அறிவியில் கல்லுாரி முதல்வர் பழனிவேல், புல முதன்மையர் கவிபாண்டியன், பொருளாளர் அருண்குமார், கல்வியியல் கல்லுாரி துணை முதல்வர் செல்வராசு முன்னிலை வகித்தனர். அலைடு அன்டு ெஹல்த் சயின்ஸ் கல்லுாரி முதல்வர் ஞானசுந்தரி வரவேற்றார்.
மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லாவண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர், மாணவர்களுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர்.
இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலை மற்றும் அறிவியில் கல்லுாரி துணை முதல்வர் ஜேசுதாஸ் நன்றி கூறினார்.