ADDED : ஜன 29, 2024 04:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு, : பண்ருட்டி அடுத்த மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பண்ருட்டி ரோட்டரி சங்கம், சென்னை அப்போலோ மருத்துவமனை ஆகியன இணைந்து, இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தின்.
ரோட்டரி சங்க தலைவர் பாராதிதாசன் தலைமை தாங்கி முகாமினை துவக்கி வைத்தார். செயலர் செந்தில்குமார், பொருளாளர் நரேஷ்சந்த் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க முன்னோடி உறுப்பினர் யுவராஜ் அவர்களின் முழு பங்களிப்புடன் முகாம் நடந்தது.
முகாமில் ரத்தத்தில் சர்க்ரை அளவு, எகோ கார்டியோகிராம், ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., மற்றும் பொது மருத்துவம் சம்மந்தமாக பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். முகாமில் ரோட்டரி சங்க முன்னாள் உதவி ஆளுனர்கள், தலைவர், செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.