/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிலம்பிமங்களத்தில் மருத்துவ முகாம்
/
சிலம்பிமங்களத்தில் மருத்துவ முகாம்
ADDED : ஜன 29, 2024 04:29 AM

புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களத்தில் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சார்பில், மருத்துவ முகாம் நடந்தது.
டாக்டர் ஆலன் தலைமை தாங்கினார். டாக்டர் சேது முன்னிலை வகித்தார். இதில் பொதுமருத்துவம், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம், கண் சிகிச்சை, தோல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 20 நோயாளிகள், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவர்கள் குமரவேல், பிளம்மிங், ஜெகதீஸ்வரன், தமிழரசி, ராம்குமார், அபிராமி, ராஜரத்தினம், ஆகிய மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சந்திரக்குமார், செவிலியர்கள் பாக்கியம், சரண்யா, ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.