/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுற்றுலா மையத்தில் மருத்துவ முகாம்
/
சுற்றுலா மையத்தில் மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 09, 2025 08:40 AM

கிள்ளை, : பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் சென்னை கிளெனீக்கல்ஸ் மருத்துவமனை இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் பிரபுதாஸ் தலைமை தாங்கி, மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். சுற்றுலா மைய மேலாளர் பைசல் அகமது முன்னிலை வகித்தார்.
முகாமில், படகு ஓட்டுனர்கள், துாய்மைப் பணியாளர்கள், சுற்றுலா மைய அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 350க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வில்லியம் ஜே சீசர் தலைமையில், டாக்டர் இளையபெருமாள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், மண்டல கணக்காளர் சிவதானு, துணை மேலாளர் ஜெயராஜ், சிவராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

