/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ முகாம்
/
இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ முகாம்
ADDED : பிப் 15, 2024 06:49 AM

குள்ளஞ்சாவடி : இலங்கை தமிழர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது
குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையில் இலங்கை தமிழர்களுக்கான முகாம் உள்ளது. இங்கு, 121 குடும்பங்களில், 600க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
குள்ளஞ்சாவடி மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன், டாக்டர் சுகன்யா முன்னிலை வகித்தனர். நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் டாக்டர் ராமநாதன் முகாமை ஒருங்கிணைத்தார்.
டாக்டர்கள் பாலாஜி, மெர்சி தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
காசநோய், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கான பரிசோதனைகள், புற்றுநோய், பல் மருத்துவம், உடற்பயிற்சி சிகிச்சை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில், 300க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். முகாம் தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

