ADDED : நவ 22, 2024 06:13 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் பூதாமூரில் காய்ச்சல் பாதிப்பு குறித்து சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். டாக்டர் லாவண்யா தலைமையிலான மருத்துவக் குழுவினர் காய்ச்சல், சளி, இருமல் உள்ளதான என பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர்.
தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு வீடு தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதில், காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும். டயர், கல் உரல், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வேண்டும். பின்னர் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி, கொசு மருந்து தெளித்தனர்.
மாவட்ட மலேரியா அலுவலர் (பொறுப்பு) மூர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் துளசிதாஸ், நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல், துப்புரவு ஆய்வாளர்கள் சிவராமகிருஷ்ணன், செங்குட்டுவன், சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், ராஜ்மோகன், சதீஷ்குமார் உடனிருந்தனர்.