/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசடிக்குப்பத்தில் மருத்துவ முகாம்
/
அரசடிக்குப்பத்தில் மருத்துவ முகாம்
ADDED : செப் 23, 2024 07:32 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அரசடிக்குப்பம் கிராமத்தில் வடக்குத்து, நெய்வேலி ஆர்ச் கேட் ரோட்டரி சங்கம், புதுச்சேரி பிம்ஸ், பாரதி மழலையர் பள்ளி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
வடக்குத்து ரோட்டரி சங்க தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார்.
நெய்வேலி ஆர்ச்கேட் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் தமிழ்வேல், மருத்துவ முகாமின் சேர்மன் பாலகுரு சக்திவேல், ரோட்டரி சங்க உதவி ஆளுநர் ரவிசேகர், மண்டல செயலாளர் அறிவழகன், ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர் அழகுச்செல்வம், செல்வராசு , பாரதி மழலையர் பள்ளி தாளாளர் சிவா முன்னிலை வகித்தனர். வடக்குத்து ரோட்டரி சங்க சாசன தலைவர் ஜெகன் முகாமை துவக்கி வைத்தார். 450க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.