ADDED : அக் 26, 2025 10:56 PM

அ நிறம் | அளவு
கிள்ளை: கிள்ளையில், தனியார் பவர் கம்பெனி, புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் கடலுார் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து, மருத்துவ முகாம் நடந்தது.
பேரூராட்சி துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில், பவர் கம்பெனி தலைமை அதிகாரி குகன், பரதன், மக்கள் தொடர்பு அதிகாரி சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.
பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்வராஜ் நன்றி கூறினார்.
