/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தலைக்குளம் கிராமத்தில் மருத்துவ முகாம்
/
தலைக்குளம் கிராமத்தில் மருத்துவ முகாம்
ADDED : ஜன 20, 2025 11:52 PM

புவனகிரி; புவனகிரி தலைக்குளத்தில், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் மற்றும் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தியது.
முகாமிற்கு அரிமா சங்கத் தலைவர் பிரவீன்சாமுவேல் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் லோகநாதன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் கலைச்செல்வன் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர்கள் அக்ஷராநவீன், அன்புமணி தலைமையிலான 30க்கும் மேற்பட்ட மருத்துவ குழு குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கினர்.
தலைக்குளம் கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் செயலாளர் ராமர் உள்ளிட்ட குழுவினர். அடிப்படை வசதிகளை செய்திருந்தனர்.
சங்க பொருளாளர் விநாயகமுருகன் நன்றி கூறினார்.