ADDED : மார் 02, 2026 03:15 AM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், நத்தத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
ஏ.எம்.எம்., அறக்கட்டளை,என்.எம்.சி.டி., தொண்டு நிறுவனம் மற்றும் ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. முகாமில், ராஜா தலைமை தாங்கினார்.
முகாமில் அனைத்து துறை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
