
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம் : சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், துாய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மங்களூர் பி.டி.ஓ., தண்டபாணி தலைமை தாங்கினார். சிறுபாக்கம் ஊராட்சி தலைவர் கவிதா விஜயகுமார், துணைத் தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அங்கேஸ்வரி வரவேற்றார். வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், மருத்துவர்கள் ரூபன் ஜோன், நவீன் ஆகியோர் துாய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர்.