/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை
/
துாய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : செப் 28, 2024 07:07 AM
காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவிலில் துாய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த துாய்மை பாரத இயக்க ஊரகம் திட்டத்தின் சார்பில், 17ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை 'துாய்மையே சேவை' சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
இதன் மூலம், கிராம ஊராட்சிகளில் பொது இடங்களில் துாய்மை பணி மேற்கொள்ளுதல், மரக்கன்றுகள் நடுதல், ஊராட்சி துாய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துதல், துாய்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்துதல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள், ஊராட்சியை அழகுப்படுத்துதல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனையொட்டி, முட்டம் ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் துாய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் ஒன்றிய சேர்மன் சக்தியா பர்வீன் பி.டி.ஓ., ஜெயக்குமாரி, மீனாட்சி சுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், மேலாளர் பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.