ADDED : மார் 07, 2026 04:41 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், யானைக்கால் நோய்க்கு மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் பாரிசெல்வி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சம்சாத் பாரிஇப்ராஹிம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வேல்முருகன், பேரூர் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கினர்.
டாக்டர்கள் மணிகண்டன், விஜயலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், முல்லைநாதன் உடனிருந்தனர்.
இதில், 28 பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
