/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
1.14 லட்சம் மாணவர்களுக்கு மனநல பயிற்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
/
1.14 லட்சம் மாணவர்களுக்கு மனநல பயிற்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
1.14 லட்சம் மாணவர்களுக்கு மனநல பயிற்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
1.14 லட்சம் மாணவர்களுக்கு மனநல பயிற்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
ADDED : ஆக 21, 2024 04:41 AM

கடலுார் : தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டத்தை கணக்கீடு செய்து, ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மகேஷ் கூறினார்.
கடலுாருக்கு நேற்று வருகை தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், திருவந்திபுரம் அரசு பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது, வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தார். அப்போது, பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளி மேம்பாட்டிற்கு குழந்தைகள் மனநிலை சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டங்கள் செயல்படுகிறதா, மாணவர்களின் நடத்தை மற்றும் தெளிவாக படிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்து வருகிறேன்.
கொரோனாவிற்கு பின் மாணவர்களின் நடத்தை தொடர்பான பிரச்னை சரி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பின்தங்கிய மாவட்டத்தை கணக்கீடு செய்து, ஆசிரியர் மூலமாக ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. முதல்வர் உத்தரவின்பேரில் 800 டாக்டர்கள் மூலம் மாநிலம் முழுவதும் மாணவர்களின் மனநலம் சார்ந்த ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களை நல்வழிப்படுத்த போலீசார் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று 67 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டத்தின் மூலம் 22 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், முதன்மை கல்வி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை