மன வளர்ச்சி குன்றிய பெண் கர்ப்பம் : தொழிலாளி கைது
மன வளர்ச்சி குன்றிய பெண் கர்ப்பம் : தொழிலாளி கைது
ADDED : மே 29, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
கடலுார்: மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் பகுதியை சேர்ந்த வர் 21 வயது மனவளர்ச்சி குன்றிய பெண். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது தாய் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக் காக அழைத்து சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அந்த பெண் 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின் பே ரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் விக்கி (எ) விக்னேஷ், 32; என்பவரை கைது செய்தனர்.
