நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே துாக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சன்னதி தெருவை சேருந்தவர் வேலாயுதம். இவரது மகன் மோகன்,52; வாழைக்காய் வியாபாரி.
இவர் மேல்பாதி கிராமத்தில் குத்தகைக்கு பயிரிட்டிருந்தார். குத்தகை காலம் முடிந்து நிலம் ஒப்படைத்த பின்பும், குத்தகைக்கு செலுத்தி பணம் வழங்காததால் மன வருத்ததில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் திருவதிகை அணைக்கட்டு பகுதியில் மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.